கோவில்களில் சங்காபிஷேகம்

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது

Update: 2021-12-13 20:13 GMT
 புதுக்கோட்டை
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி நேற்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற கடைசி சோம வார விழாவில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய குருந்த மூலத்தின் முன் 108 சங்குகளை வைத்து, நீர் நிரப்பி வேத மந்திரங்கள் சொல்லி யாகம் வளர்க்கப்பட்டு நம்பியார் ஸ்தானிக்கர்கள் பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் 108 சங்குகளில் உள்ள புனிதநீரை ஊற்றி அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்