விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு

நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2021-12-13 20:08 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தென்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் லோகநாத் (வயது 19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.  இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற மேலப்பாளையத்தை சேர்ந்த கார் புரோக்கரான அபுதாகிர் (59) என்பவர் மீது, லோகநாத் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் லோகநாத் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் லோகநாத், அபுதாகிர் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்