136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது
அறந்தாங்கியில் 136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு நேற்று அழியாநிலை பகுதியில் ரோந்து சென்றார். அப்போது வெள்ளாற்றில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் அள்ளி கடத்தி வந்த சுனையக்காட்டை சேர்ந்த மணிவண்ணன் (வயது 32) என்பவரை கைது செய்ததுடன் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தார். இதேபோல, நேற்று முன்தினம் இரவு மஞ்சக்கரை பகுதியில் ரோந்து சென்ற போது மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். அதன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்தநிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அறந்தாங்கி நவரத்தின நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றார். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த தஞ்சாவூர் மாவட்டம் கொண்டிக்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனை(30) கைது செய்தார். அவரிடம் இருந்து 136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.