சூதாடிய 5 பேர் கைது
நெலலை டவுனில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் நேற்று நெல்லை டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் நெல்லை டவுன் ஜெயபிரகாஷ் தெருவை சேர்ந்த நெல்லையப்பன், ராமச்சந்திரன், லட்சுமணன், அண்ணாநகர் காந்தி, தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த கணேசன் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்தனர்.