சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
உலக நன்மை வேண்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
சிவகாசி,
உலக நன்மை வேண்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக 1,008 சங்காபிஷேகம் நடந்தது. சங்காபிஷேகத்தையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 3 வருடங்களுக்கு பின்னர் 1,008 சங்காபிஷேகம் சிவகாசி சிவன் கோவிலில் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் கோவில், வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தேவதானம்
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தையொட்டி 1,008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சுவாமிக்கும், தவம் பெற்ற நாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் ஜவகர் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். அதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உலக நன்ைம வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.