நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 போலீசார் சரண்
ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை வாலிபர் இறந்த சம்பவத்தில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த 2 போலீசார் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை வாலிபர் இறந்த சம்பவத்தில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த 2 போலீசார் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வாலிபர் சாவு
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி உள்பட 4 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பணி ஓய்வு பெற்ற முனியசாமியை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து தினமும் காலையில் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது, இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
2 போலீசார் சரண்
அவர்கள் அந்தமானுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி சிட்டிபாபு வருகிற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் கோதண்டராமனை சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடிவருகின்றனர்.