சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

Update: 2021-12-13 18:27 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுத்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டு வண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.

பரிசுகள்

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை சண்முகபுரம் விஜயகுமார் வண்டியும், 3-வது பரிசை பாண்டிகோவில் பாண்டியராஜன் வண்டியும், 4-வது பரிசை எஸ்.வி.பட்டிணம் உமர் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை காரைக்குடி அழகுதேவி வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் முருகன் வண்டியும், 3-வது பரிசை மேலச்செல்வனூர் சத்தியமூர்த்தி வண்டியும், 4-வது பரிசை காரைக்குடி பாண்டிமுருகன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், வண்டியை ஓட்டியவர்களுக்கும் பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்