பொதுமக்கள் சாலை மறியல்

தேவகோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-13 18:22 GMT
தேவகோட்டை,
காரைக்குடி கணேசபுரம், கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரி தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
நேற்று திங்கட்கிழமை என்பதால் கோட்டாட்சியர் மனு வாங்குவார் என்ற நம்பிக்கையில் பல மணிநேரம் காத்திருந்தனர். அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. கோட்டாட்சியர் வந்த பிறகு தான் மனுக்கள் வாங்கப்படும் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 3 மணிக்கு தேவகோட்டை ராம்நகர் திருச்சி-ராமேசுவரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் மறியல் போராட்டம் நடைபெற்றது.பின்னர் தகவலறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் அந்தோணிராஜ் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை(அதாவது இன்று) கோட்டாச்சியரை சந்திக்கலாம் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்