குமரியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்

குமரியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்

Update: 2021-12-13 17:58 GMT
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்கட்சி தோ்தல் நேற்று விறு விறுப்பாக நடந்தது. அதே போல குமரி மாவட்டத்திலும் கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்தனர். குமரி மாவட்ட உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் சின்னப்பன், எஸ்.பி.சண்முகநாதன் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை வாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர் சின்னப்பனும் வேட்பு மனுக்களை பெற்றார். மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. உள்கட்சி தேர்தல் விறு,விறுப்பாக நடந்தது. பல இடங்களில் சமரச பேச்சுவார்த்தை மூலமாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் இன்றும் (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது.

மேலும் செய்திகள்