அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4 -வது சோமவார விழா

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4 -வது சோமவார விழா நடந்தது. இதில், படிகளில் உருண்டு ஏறி மலை உச்சிக்கு சென்று பக்தர் வழிபாடு நடத்தினார்.

Update: 2021-12-13 17:44 GMT
கரூர்
குளித்தலை
ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பிரசித்திபெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவத்தலங்களில் முதலாவதாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சோமவார விழா நடைபெறுவது வழக்கம்.
 அதேபோல் இந்த ஆண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த நவம்பர் 22 -ந் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று 4-வது சோமவாரவிழா நேற்று நடைபெற்றது. 
சுவாமியை வழிபட்டனர்
இதில் குளித்தலை மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள் குலதெய்வமாக ரெத்தினகிரீஸ்வரரை வழிபடும் பக்தர்கள் என திரளானோர் இக்கோவிலுக்கு வந்து மலை உச்சிக்குச்சென்று சுவாமியை வழிபட்டனர். 
படிகளில் உருண்டு ஏறி வழிபாடு
பலர் மலை அடிவாரத்தில் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக இக்கோவில் பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள் உள்பட பல பொருட்களை வைத்து தேங்காய் உடைத்து சூடமேற்றி சாமியை வழிபட்டனர். 
பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டுவந்து கோவிலில் கொட்டி வழிபட்டனர். இந்தநிலையில் நங்கவரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்ற பக்தர் உலக நன்மைக்காவும், தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும் இக்கோவிலில் உள்ள 1,017 படிகளில் உருண்டு ஏறி சுவாமியை வழிபட்டார்.

மேலும் செய்திகள்