குமாரபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து சாவு

குமாரபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து சாவு;

Update: 2021-12-13 17:32 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
விசைத்தறி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு ரதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு முத்துசாமி அவரது வீட்டுக்கு அருகே  உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
விசாரணை
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கிணற்றுக்குள் வீரர்கள் கயிறு கட்டி இறங்கி தேடினர். பின்னர் சுமார் 3 மணி தேடலுக்கு பிறகு முத்துசாமியை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதையடுத்து அங்கு சென்ற குமாரபாளையம் போலீசார் இறந்த முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

மேலும் செய்திகள்