ராணிப்பேட்டை அருேக விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
ராணிப்பேட்டை அருேக விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயார் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருேக விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயார் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கிராமத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
கட்டிட மேஸ்திரி
ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (வயது 70). இவருக்கு புனிதா என்ற மகளும், அருள் (வயது 35) என்ற மகனும் உண்டு. கட்டிட மேஸ்திரியான அருளுக்கு திருமணமாகி மேனகா என்ற மனைவி உள்ளார். அவர்களுக்கு ஜிந்தியா (8) என்ற மகளும், மனோரஞ்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.
அருள் 7-ந்தேதி ஆற்காடு அருகில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு, சிகிச்ைச பலனின்றி நேற்று அருள் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோனைக்குப் பின் அருளின் உடல் நேற்று மதியம் 12 மணியளவில் வாணாபாடியில் உள்ள அவரின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்கள், கிராமத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதிர்ச்சியில் தாயார் சாவு
விபத்தில் பலியான மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு ஞானம்மாள் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மூர்ச்சையாகி கீழே விழுந்த ஞானம்மாளை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேேய ஞானம்மாள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாகக் கூறினர். இதனால் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
ஞானம்மாளின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து, மகனின் உடல் அருேக உறவினர்கள், கிராமத்தினர் அஞ்சலிக்காக வைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தாய், மகன் உடல்கள் அடக்கம் செய்யப்படும், எனத் ெதரிகிறது.