மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
ராணிப்பேட்டை
சோளிங்கர் தாலுகா தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 58), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து, அம்மூர்-சோளிங்கர் சாலையில் சென்று கொண்டிருந்தார். மேல்வேலம் புதிய காலனி அருகே சென்றபோது ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து சேட்டு திடீரெனக் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.