சர்வதேச குறும்பட விழா

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சர்வதேச குறும்பட விழா நடந்தது.

Update: 2021-12-13 17:04 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ், இந்திய மொழிகளில் கிராமிய கலைகள் துறை மற்றும் மதுரை மறுபக்கம் ஊடக செயல்பாட்டு குழு ஆகியவை சார்பில் சர்வதேச ஆவண குறும்பட விழா நடந்தது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) ரெங்கநாதன் தலைமை தாங்கி, விழா கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆவண குறும்படங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் ஊடகமாக விளங்குகின்றன. பெரிய தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமலேயே செல்போன் மூலமாக குறும்படத்தை தயாரிக்கும் சூழல் உள்ளது என்றார். 

முன்னதாக இந்திய மொழிகள் துறையின் முதன்மை பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். ஆவணப்பட இயக்குனர் சீனிவாசன், குறும்பட இயக்குனர் மயன், மறுபக்க அமைப்பின் இயக்குனர் அமுதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் சொற்களை கனவு காணுதல், விழுமிய பயணம், ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நாகரீகம் ஆகிய ஆவண படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன. இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்