சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள 49 கைதிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைப்பு

49 கைதிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைப்பு

Update: 2021-12-13 16:40 GMT
வேலூர்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி கொடுங்குற்றம் செய்தவர்கள் தவிர்த்து தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களில் 46 பேரும், பெண்கள் ஜெயிலில் 3 பேரும் என 49 தண்டனை கைதிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்