வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் உள்ள பெரிய விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 24-ந் தேதி காலை யாகசாலை முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. பிறகு கடந்த 10-ந் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பிறகு பெரிய விநாயகர் கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் விடப்பட்டது, அதையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.