ரூ4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2021-12-13 14:18 GMT
அவினாசி, 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பு சிங் (வயது 30.) இவர் அவினாசியை அடுத்து தெக்கலூரில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் புகையிலை பொருட்களை அங்கு வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அங்கு சென்றனர். 
அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சாம்பு சிங்கை போலிசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்கு போலீசார் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட பல்வேறு  புகையிலைப்பொருட்கள் மூட்டை முட்டையாக வைக்கப்பட்டிருந்தது. ரூ 4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடடைத்தனர்.

மேலும் செய்திகள்