கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-12-13 13:57 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில்  கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கோட்ட பொறியாளர் குருசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவில், இணைய மணியாச்சி பஞ்சாயத்து அத்தை கொண்டான், கோமதி நகர், சீனிவாச நகர், இந்திரா நகர் பகுதிகளில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவில் எலும்புக்கூடாக உள்ள 18 மின்கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்கள் நட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட உதவி கோட்ட பொறியாளர், ஆபத்தான மின் கம்பங்களை விரைவில் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்