தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-12-13 13:50 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருச்செந்தூர் ரோட்டில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்த ரவி மகன் வேல்முருகன் என்ற பானா வேல்முருகன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வேல்முருகன் மீது மொத்தம் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்