ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரி அணி வெற்றி
ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரி அணி வெற்றி
கோவை
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கோவை சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது.
முதல் போட்டியில் பிஷப் அப்பாசாமி கல்லூரி அணியும், கொங்குநாடு கல்லூரி அணியும் மோதியது.
இதில் பிஷப் அப்பாசாமி கல்லூரி அணி 39-13 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்றது.
2-வது போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும், கே.ஜி. கல்லூரி அணியும் மோதின. இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி 38-10 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
3-வது போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி, அரசு கலைக்கல்லூரி அணியை எதிர்கொண்டது.
இதில் பாரதியார் பல்கலைக்கழக அணி 34-06 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
4-வது போட்டியில் ரத்தினம் கல்லூரி அணி, இந்துஸ்தான் கல்லூரி அணியை எதிர்கொண்டது. முடிவில் ரத்தினம் கல்லூரி அணி 57-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.