காஞ்சீபுரத்தில் கஞ்சா, குட்கா விற்ற 70 பேர் கைது

குட்கா, பான்மசாலா விற்பனை செய்து வந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து குட்கா, பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-13 11:58 GMT
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் கஞ்சா, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி சரித்திரப் பதிவேடு ரவுடிகளான பெரிய காஞ்சீபுரத்தை சேர்ந்த முகமது இளாகி (வயது 36), ரமேஷ் (41), சிறுவாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் (40), ராஜா (34), தாமலை சேர்ந்த இளவரசு (24), முனியாண்டி (24) கைது செய்தனர்.

மேலும் காஞ்சீபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த கரிபிரசாந்த் (24), மாபு பாஷா (31), பரத் (24), சதீஷ் (23), சிவகுமார் (28), அஜய் (23) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த வடமங்கலத்தை சேர்ந்த தண்டபாணி (23), நரசிங்கபுரம், விஜய் (23), ரூகல் அகமது (19), அசாம் மாநிலத்தை சேர்ந்த நீலாம்பஜார், செரப்பணஞ்சேரியை சேர்ந்த வெங்கடேசன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குட்கா, பான்மசாலா விற்பனை செய்து வந்த 60 நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.11 ஆயிரம் மதிப்புடைய 12.5 கிலோகிராம் குட்கா, பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்