ஓரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கிளீனர் பலி

ஓரகடம் அருகே லாரியை டிரைவர் பின்னால் இயக்கியபோது மோதி கிளீனர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2021-12-13 11:37 GMT
கிளீனர் பலி

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த வல்லகோட்டை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 31). இவர் வீட்டை காலி செய்வதற்காக தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த லாரி மற்றும் தொழிலாளர்கள் வந்து வீட்டை காலி செய்து விட்டு திரும்பும்போது டிரைவர் லாரியை பின்னால் இயக்கினார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த லாரியின் கிளீனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா எட்டிசேரி நடுத்தெரு பகுதியை முருகேசன் (22) என்பவர் மீது எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்