பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விடுதலை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-12-13 10:43 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விடுதலை கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் பஞ்சமர் பூமிதான நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்