போதைப்பொருட்கள் விற்ற வழக்கில் 65 பேர் கைது
கடந்த 2 நாட்களாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்றவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்தனர்.
சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கடந்த 2 நாட்களாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்றவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்தனர். 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.