அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பூர்ணபிரகாஷ் (வயது 45). இவர் மீது அவரது நண்பர் மயிலாப்பூர் கணேசன் உள்பட 6 பேர் ஆயிரம் விளக்கு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகாரில் கணேசன் கூறி இருப்பதாவது:-
பல லட்சம் மோசடி
எனக்கு தெரிந்த நண்பர் என்ற முறையில் பூர்ணபிரகாஷ், அவரது தந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்று ரூ.5 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளை செலவுக்காக வாங்கினார். அந்த பணம் மற்றும் நகைகளை திருப்பித்தரவில்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறையிலும், பொதுப்பணித்துறையிலும் தனக்கு தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், அங்கு வேலை வாங்கிதருவதாக கூறி என்னுடைய சிபாரிசின் பேரில் நிறைய பேர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார்.
யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது பற்றி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கைது
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து, பூர்ணபிரகாசை ஆயிரம்விளக்கு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், சாமுண்டீஸ்வரி ஆகியோர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பூர்ணபிரகாஷ் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.