கொண்டலாம்பட்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி கூலித்தொழிலாளி சாவு

கொண்டலாம்பட்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி கூலித்தொழிலாளி இறந்தார்.

Update: 2021-12-12 22:35 GMT
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62), கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் கோட்டை முனியப்பன் கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது அந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. 
இந்த தொட்டியின் மீது சுப்பிரமணி அமர்ந்திருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று தண்ணீர் தொட்டியில் சாய்ந்து விழுந்து மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்ததும், கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவர் சுப்பிரமணி தண்ணீர் தொட்டியில் மூழ்கி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்