மாவட்ட வன அலுவலரின் குடியிருப்பில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள்-போலீசார் விசாரணை

சேலம் மாவட்ட வன அலுவலரின் குடியிருப்பில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-12-12 22:23 GMT
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து சாரதா கல்லூரிக்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான மாவட்ட வன அலுவலரின் குடியிருப்பு உள்ளது. மாவட்ட வன அலுவலராக கவுதம் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில் இவரது வீட்டின் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த 3 சந்தன மரங்களை வெட்டினர். அப்போது, மரங்களை வெட்டும் சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த இரவுநேர காவலாளிகள் திடீரென வந்தனர். ஆனால் ஆட்கள் வருவதை அறிந்த அந்த 2 நபர்கள், வெட்டிய சந்தன மரக்கட்டைகளை எடுத்துக்கொண்டு தப்பித்து ஓடினர். வெட்டிய சந்தன மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்து சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்