வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு

வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டனர்.

Update: 2021-12-12 22:19 GMT
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 30), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று காலை பார்த்த போது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்