கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-12-12 20:42 GMT
திருச்சி
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் நேற்று காலை காந்தி மார்க்கெட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வரகனேரியை சேர்ந்த அபுதாகிர் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, திருச்சி பீமநகர் முறுக்குக்காரத்தெரு பகுதியில் நேற்று காலை பாலக்கரை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருந்த தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்த ஜான்பாஷாவை(26) கைது செய்தனர். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்