கியாஸ் கசிவால் தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு

கியாஸ் கசிவால் தீக்காயம் அடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2021-12-12 20:30 GMT
வையம்பட்டி
 மணப்பாறையை அடுத்த அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). கட்டிடத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக அவரது உடலில் தீப்பிடித்தது. அப்போது அங்கு ஓடிவந்த அவரது குழந்தைகள் தமிழ்செல்வன் (8), கார்த்திக் (6) ஆகியோர் மீதும் தீப்பிடித்தது.
பலத்த தீக்காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்களில் நேற்று சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்