தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-12-12 19:04 GMT
குப்பை தொட்டி  
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஆசிரியர் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இப்பகுதியில் குப்பை தொட்டி அமைத்து தர வேண்டும். 
சாந்தி, கல்லல். 
சேதமான பயணிகள் நிழற்குடை 
விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் உள்ளே சிலர் பழைய பொருட்கள், விறகுகள் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர். இதனால் விஷபூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இங்கு வரும் மாணவ- மாணவிகள், பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
இதயத்துல்லா, ஆவுடையாபுரம். 
நாய்கள் தொல்லை 
மதுரை மாவட்டம் மீனாட்சி நகர், வில்லாபுரம், 6-வது மேற்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை உள்ளது. நாய்கள் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாய்கள் ெதால்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? 
காவ்யா பாலகிருஷ்ணன், மதுரை. 
சாலை வசதி தேவை 
விருதுநகர் மாவட்டம் கட்டினாா்பட்டி பஞ்சாயத்து ஆதிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இது ெதாடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு ெகாடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வீரராஜ், ஆதிபட்டி. 
பாதாள சாக்கடை உடைப்பு 
மதுரை அனுப்பானடி செல்லும் சாலையின் நடுவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் ெசன்று வருகின்றன. பாதாள சாக்கடை மூடி உடைந்து கிடப்பதால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவா, மதுரை. 
தெருவிளக்கு 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கங்கரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எலுமிச்சைங்காய்பட்டி விலக்கு பின்புறம் உள்ள செவக்காட்டு காலணியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். மக்களின் நலன்கருதி இங்கு தெருவிளக்கு அமைக்கப்படுமா?
செல்வமணி, எலுமிச்சைங்காய்பட்டி.
குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ. காலனி செல்லும் எஸ்.ஆர்.நாயுடு  நகர் மெயின் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும். 
ஜெயகணேஷ், சாத்தூர்.

மேலும் செய்திகள்