கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது.

Update: 2021-12-12 18:56 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி  கிறிஸ்தவர்கள் 1 மாதத்திற்கு முன்பே இதற்கான ஆயத்தப்பணிகளை வீடுகள் மற்றும் தேவாலயங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பாடகர் குழு சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி சபை குரு எஸ்.பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. பாடகர் குழுவின் தலைவர் ஜி.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினர். உதவி குருக்கள் சாலமோன், காட்வின் ஆகியோர் வேத பாடங்கள் வாசித்தனர். தூத்துக்குடியை சேர்ந்த சாம் அர்னால்டு சிறப்பு தேவசெய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்