தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
எஸ்.புதூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கே.நெடுவயல் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருடைய மகன் திருமுருகன் என்ற சூர்யா (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தாயார் 1½ ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயாரின் நினைவால் மனஉளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.