நிலத்தை விற்பதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி பெண் மீது வழக்குப்பதிவு
நிலத்தை விற்பதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
மோசடி
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி சுசித்ரா (வயது 46). இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கறம்பக்குடி அருகே அம்புகோவில் பகுதியை சேர்ந்த மணிவண்ணனின் மனைவி சாந்தகுமாரி, 140 சென்ட் நிலத்தை ரூ.26 லட்சத்து 60 ஆயிரத்திற்கு தன்னிடம் விற்பதாக கூறினார்.
இதற்காக முன்பணம் மற்றும் 2-வது தவணை என மொத்தம் ரூ.18 லட்சத்தை சாந்தகுமாரியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தை பெற்ற பின் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை எனவும், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சாந்தகுமாரி மீது இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.