மேலும் 47 பேருக்கு கொரோனா

மேலும் 47 பேருக்கு கொரோனா

Update: 2021-12-12 17:24 GMT
அனுப்பர்பாளையம், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நோய் தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1004 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 53 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்