சாலை மையத்தடுப்பு சுவர் மீது கார் மோதி பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்

சாலை மையத்தடுப்பு சுவர் மீது கார் மோதி பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்

Update: 2021-12-12 17:22 GMT
அவினாசி, 
அவினாசி அருகே சாலை மையத்தடுப்பு சுவர் மீது கார் மோதி பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.
பனியன் நிறுவன மேலாளர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சின்னேரிபாளையம் அபிராமி கார்டனை சேர்ந்த அர்த்தநாரிசாமி என்பவரது மகன் முருகானந்தம் (வயது 36). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். 
நேற்று முருகானந்தமும் அவரது நண்பர் அஜீஸ்குமாரும் (32) மங்கலத்திலிருந்து அவினாசிக்கு காரில் வந்தனர். காரை முருகானந்தம் ஓட்டி வந்தார். காரில் அவரது அருகில் அஜீஸ்குமார் அமர்ந்து வந்தார்.
தடுப்புசுவரில் கார் மோதல்
இந்த நிலையில் கார் கோவை - ஈரோடு பைபாஸ் ரோட்டில் ரங்கா நகர் அருகே வந்தபோது முருகானந்தத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் முருகானந்தத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
 உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் உயிரிழந்தார். உடன் வந்த அஜீஸ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்