கஞ்சா விற்ற தம்பதி கைது

பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்ற தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-12 17:09 GMT
பட்டிவீரன்பட்டி: 

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் குட்டிக்கரடு பகுதியில் கஞ்சா விற்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அய்யம்பாளையம் குட்டிக்கரடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற தம்பதியினரை போலீசார் பிடித்தனர். 

அவர்கள் வைத்திருந்த பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42), அவரது மனைவி ஜோதி (35) என்றும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.   

மேலும் செய்திகள்