வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே தாசவநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 சேவல்களை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக் குமார் (வயது 25), வள்ளியரச்சல் சேமலைப்பன் மகன் சக்திவேல் (44)ள, காடையூரான் வலசு முருகன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 சேவல் மற்றும் ரொக்கம் ரூ.900 கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.