சின்னமனூரில் அய்யப்பசாமிக்கு ஆராட்டு விழா

சின்னமனூரில் அய்யப்பசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.

Update: 2021-12-12 15:09 GMT
சின்னமனூர்:
சின்னமனூரில் அய்யப்ப பக்த பஜனை சபையின் சார்பில் 31-வது ஆண்டாக அய்யப்பசாமிக்கு ஆராட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதையடுத்து சின்னமனூர் அய்யப்பன் பஜனை சபையிலிருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அய்யப்பன் சிலை யானை வாகனத்தில் சின்னமனூர் 4 ரத வீதிகளின் வழியாக  முல்லைப்பெரியாற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முல்லைப்பெரியாற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து பஜனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சின்னமனூர் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் ஊர் மக்கள் நோய் நொடிகள் இன்றி வாழவும், நாடு செழிப்படையவும் வேண்டி நெல்லி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து யானை வாகனத்தில் அய்யயப்ப சாமி சிலை மீண்டும் பஜனை சபைக்கு கொண்டுவரப்பட்டது. ஆராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பஜனை சபை தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திர ராஜன் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்