முதுமலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
முதுமலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கூடலூர்
ஒமைக்ரான் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தியதால் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் கடந்த 6 மாதமாக தொடர் நடவடிக்கை மேற்கொண்டதால் கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீலகிரி உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை பரவலாக அதிகரித்தது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் கனமழை பெய்தது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து
. இதன் காரணமாக குறைந்த காலங்களில் பரவலாக மாநிலம் முழுவதும் நிலவியதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்து பரவலாக அதிகரிக்கத் தொடங்கியது.
யானைகள் முகாம்
இந்த நிலையில் கேரளா- கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் முதுமலை, கூடலூர், மசினகுடி பகுதியில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் போதிய அளவு வியாபாரம் இல்லை.
மேலும் முதுமலையில் வாகன சவாரி மற்றும் வளர்ப்பு யானை முகாமுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் பரவலாக குறைந்து காணப்படுகிறது. இதனால் முதுமலை களை இழந்து காணப்படுகிறது. இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வரத்து குறைந்தது
ஒமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெளிமாநிலங் களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முதுமலை மட்டுமின்றி பிற சுற்றுலா மையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
இன்னும் ஒரு வாரம் கழித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு தினம் வரும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.