தி.மு.க. அரசை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
தேனியில் பா.ஜ.க.வினர் மாவட்ட அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். கருத்து சுதந்திரத்தை சிதைக்கும் நோக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தை தி.மு.க. அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க. தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில மருத்துவ அணி தலைவர் விஜயபாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.