மாநகர பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; தனியார் பள்ளி ஊழியர் கைது

சென்னை மாநகர பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷனில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-12 11:49 GMT
சென்னை மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், 21 ஜி வழித்தட மாநகர பஸ்சில் பிராட்வே நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது இருக்கை அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி இறங்கியுடன் ஆண் பயணி ஒருவர் அமர்ந்தார். அவர், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். பெண் பயணி எச்சரித்தும் அந்த ஆண் பயணி அடங்கவில்லை.

இந்தநிலையில் மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே பஸ் வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பஸ்சில் இருந்து இறக்கி போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஆதனூர் எம்.ஜி. நகரை சேர்ந்த ரவி (47) என்பதும், தனியார் பள்ளியில் கேஷியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்