விடுதியில் 5 பேருக்கு வாந்தி-மயக்கம்: பாலிடெக்னிக் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் உள்ளது. அதன் வளாகத்திலேயே மாணவிகளுக்கான தங்கும் விடுதி அமைந்துள்ளது. நேற்று மதியம் விடுதியில் உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விடுதியில் தங்கியுள்ள 60 மாணவிகள், விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பாலிடெக்னிக் முதல்வர் செண்பகவல்லி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.