மேட்டூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு

மேட்டூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்கப்பட்டது.

Update: 2021-12-11 21:30 GMT
மேட்டூர்:
மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மேட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதில் போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியம், மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

மேலும் செய்திகள்