3 வாலிபர்கள் கைது
டிரைவரிடம் திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாம்பட்டி,
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வேலுபிள்ளை. இவருடைய மகன் முருகன் (வயது48). சொந்தமாக லாரி வைத்துள்ளார். நேற்று சென்னையில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு லாரியை முருகன் ஓட்டி வந்துள்ளார். கொட்டாம்பட்டியை அடுத்த பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் ஓய்வு பகுதியில் லாரியை நிறுத்தி ஓய்வு எடுத்துள்ளார். அப்போது 3 வாலிபர்கள் முருகனிடம் பணம் மற்றும் செல்போன்களை திருடமுயன்று உள்ளனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரை பிடித்து கொட்டாம் பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந் தகம் அருகே உள்ள மாமண்டூரை சேர்ந்த ரவி மகன் சுனில் (24), ஏகாம்பரம் மகன் கண்ணதாசன் (29), சுகுமார் மகன் பிரேம்குமார் (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.