கண்மாயில் மூழ்கி மாணவர் பலி

கண்மாயில் மூழ்கி மாணவர் பலியானார்.

Update: 2021-12-11 20:13 GMT
மேலூர், 
மேலூர் அருகில் உள்ள திருவாதவூர் கோவில்பட்டியை சேர்ந்தவர் பொண்னுபாண்டி. இவரது மகன் அகிலன் (வயது19). இவர் மதுரை காரியாபட்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்துவந்தார். அகிலன் அவரது நண்பர்களுடன் திருவாதவூர் பெரிய கண்மாயில்  குளித்துள்ளார். அப்போது தண்ணீருக்கு அடியில் மூழ்கிய படியே மீன் போல நீந்தி கண்மாய் நடுவில் உள்ள அளவு தூண்களை யார் தொடுவது என நண்பர்களுடன் போட்டியில் நீந்தி உள்ளார். அவருடன் அப்பாஸ் என்பவரும் போட்டி போட்டு தண்ணீருக்கு அடியில் மீன் போல நீந்தி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அகிலனும் அப்பாசும் மூச்சு திணறல் ஏற்பட்டு போராடினார். இதனை பார்த்து கண்மாய் கரையில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அகிலன் தண்ணீரில் மூழ்கி இறந்துபோனார். மீட்கப்பட்ட அப்பாஸ் ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். மேலூர் தீயணைப்பு படையினர் அகிலனின் உடலை மீட்டனர். மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்