ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கந்தகுமார் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் 5,518 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 3,650 வழக்குகள் சமரசமாக பேசி தீர்வு காணப்பட்டது. இதில் ரூ. 8,52,77,642 நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்ட.து. இந்த விசாரணையில் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் கலந்துகொண்டனர்.