லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2021-12-11 20:00 GMT
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 36). தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜதுரை காயம் அடைந்தார்.  இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்