தொப்பூர் அருகே லாரி மோதி விவசாயி பலி
தொப்பூர் அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.;
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே தாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது40). விவசாயி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஜெயராமன் (53) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் (40) பரிதாபமாக உயிரிழந்தார். அரசு பள்ளி ஆசிரியர் ஜெயராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.