விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-11 19:48 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 35). விவசாயி. சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த கண்ணதாசன் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்